Tuesday 15 August 2017

காந்தி விழிப்புணர்வு அணி மக்களிடேயே காந்திய கொள்கையின் விழிப்புணர்வு

காந்தி விழிப்புணர்வு அணி மக்களிடேயே காந்திய கொள்கையின் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டி கன்னியாகுமரியில் தொடங்கி சென்னை வரை யாத்திரை மேற்கொண்டது.
இந்த யாத்திரை 12.08.17 அன்று முடிந்தது.
இந்தக் குழுவின் உறுப்பினர்கள் அனைவரையும் தக்கர் பாபா வித்யாலயா சமிதி , சென்னை காதி  கிராமஉத்தியோக பவன் மற்றும் பிற காந்திய நிறுவனங்கள் இணைந்து பாராட்டின. இறைவணக்கத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. திரு பி மாருதி ,செயலாளர் தக்கர் பாபா வித்யாலயா சமிதி அனைவரையும் வரவேற்றார்.
திரு கண்ணன் கணினி துறையிலிருந்து இன்று விவசாயத்திலும் கல்வியிலும் இன்று ஈடுபாடு கொண்டு யாத்திரையில் பங்கேற்றவர் கூறுகையில் காதியை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
திரு சிவகுமார் விழிப்புணர்வு குரலின் ஆசிரியர் பேசுகையில் ஒவ்வொருவரும் சிறு அளிவிலாவது சமூகத்திற்கு ஏதேனும் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
திரு கே சுப்பைய்யன் மக்கள் சேவை இயக்கத்தின் பொதுச் செயலாளர் வட நாடுகள் நமது கலாச்சாரத்தை பின்பற்றும் பொது நாம் அதை மறந்து விட்டோம் என வருத்தப்பட்டார்.
திரு அண்ணாமலை ரங்கநாதன் சார்பாக வருகை தந்த திருமதி அஹிம்சா குழந்தைகளுக்கு நட்டு தலைவர்களின் வாழ்க்கை வரலாறு கூறி வளர்க்க வேண்டும் என அறிவுறுத்தினார் .
திரு பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி எழுத்தாளர் பேசுகையில் செய்திக்காக மட்டும் காந்தியை உபயோகிக்காமல் ஒவ்வொரு செயலிலும் காந்தியை உணர வேண்டும் என அறிவுறுத்தினார். திரு நரேஷ் குப்தா முன்னாள் அதிகாரி காந்தியடிகள் எளிமையின் மறு உருவம் என புகழ்ந்தார் அவருக்கு மேலை நாடுகளில் மதிப்பு இன்னும் அதிகம் என கூறினார்.
தக்கர் பாபா வித்யாலயாவின் பற்ற வைப்பர் மற்றும் தையற்ப் பயிற்சி மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன திரு N. மார்கண்டன் காந்திகிராம பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் , காந்திய விழிப்புணர்வு குழுவின் தலைவர் வாழக்கை வாழ்வதற்கான முறையை காந்திஅடிகிலின் வாழ்கையிலிருந்தே கற்றுக்கொள்ளலாம் என்றார் அனால் இன்று நாம் தொலைந்து விட்டோம் அதை உணர்ந்து காந்திய வழியில் வாழ ஆரம்பிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
திருமதி ராஜேஸ்வரி , செயலாளர் சென்னை காதி  கிராமஉத்தியோக பவன் நன்றி உரையாற்றினார்.

காந்தி விழிப்புணர்வு அணி

காந்தி விழிப்புணர்வு அணி

காந்தி விழிப்புணர்வு அணி

No comments:

Post a Comment