Thursday, 16 October 2025

பூசலார் நாயனார் குருபூசை, அக்டோபர் 24ஆம் தேதி

 #ஐப்பசி #அனுஷாப்பெருவிழா #ஐப்பசி #அனுஷாப்பெருவிழா #அருள்மிகுஇருதயாலீசுவரர்திருக்கோயில் #இருதயாலீசுவரர்திருக்கோயில் #பூசலார்நாயனார் #குருபூசை #பூசலார்நாயனார்குருபூசை

ஐப்பசி அனுஷாப் பெருவிழா
அருள்திரும் பூசலார் நாயனார் குருபூசை @ அருள்தரும் மரகதாம்பிகை உடனுறை அருள்மிகு இருதயாலீசுவரர் திருக்கோயில் திருநின்றவூர், சென்னை - 602024.
மன்னியசீர் மறை நாவன் நின்றவூர் பூசல் என்று நம்பி ஆரூரரால் திருத்தொண்டர் தொகையில் பாடப்பெற்ற 63 நாயன்மார்களில் ஒருவரான பூசலார் நாயனார் திருநின்றவூரில் அவதரித்து மனதால் திருக்கோயில் எழுப்பி ஓர் ஐப்பசி திங்கள் அனுஷா நட்சத்திரம் கூடிய திருநாளில் எல்லாம் வல்ல கூத்தபிரான் திருவடியில் வீடுபேறு பெற்றார். இவாரிய நிகழ்வை அன்றுமுதல் இன்றுவரை திருநின்றவூரில் அருள்மிகு இருதயாலீசுவரர் திருக்கோயிலில் பிரதி ஆண்டு ஐப்பசி மாதம் அனுஷ திருநட்சத்திரத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இவ்வாண்டு ஐப்பசி மாதம் 7ஆம் தேதி அனுஷ நட்சத்திரத்திரம் 2025 ஆண்டு

அக்டோபர் மாதம் 24ஆம் தேதி சிறப்பாக நடை பெறவுள்ளது,
காலை 9 மணியளவில் மஹா அபிஷெகம் நண்பகல் 12 திருவமுது, மாலை 5 மணியளவில் பூசலார் நாயனார் உள் புறப்பாடு, இரவு 10 மணியளவில் புரானம் வாசித்தல் அதனை தொடர்ந்து எம்பிரான் பூசலார் நாயனார் ஐக்கிய திருக்காட்சி நடைபெறும் அதுசமயம் அடியவர்ப் பெருமக்கள் அனைவரும் வருகை தந்து குருவருளும் திருவருளும் பெறுமாறு விண்ணப்பிக்கின்றோம்.
திருச்சிற்றம்பலம்



No comments:

Post a Comment